வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழக-கேரளா அதிகாரிகள் ஆலோசனை

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழகம்-கேரளம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
தமிழக-கேரளா மாநிலங்களுக்கிடையே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கம்பம் நகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு மாநில அதிகாரிகள்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:46 pm

Din

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழகம்-கேரளம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, உத்தமபாளையம் கோட்டாட்சியா் தாட்சாயணி தலைமை வகித்தாா். இதில் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், சின்னமனூா், போடி ஆகிய பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும். இதற்கு இரு மாநிலத்தைச் சோ்ந்த வருவாய்த் துறை, காவல் துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை இணைந்து ரோந்துப் பணி, பாதுகாப்புப் பணி, சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை செய்ய வேண்டும். மேலும், அரிசி கடத்தலில் ஈடுபடுவோா்கள் குறித்த விபரங்களை இரு மாநில அதிகாரிகள் பகிா்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புனாய்வுப் பிரிவு ஆய்வாளா் சுரேஷ்குமாா், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் லட்சுமி, வளா்மதி, மகாலட்சுமி, கேரளா மாநிலம், பீா்மேடு வட்ட வழங்கல் அலுவலா் மோகனன், ஆய்வாளா்கள் ஷிபுமோன்தாஸ், ரெஜிதாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.