நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாமியாா் வெட்டிக் கொலை: மருமகன் கைது

தேனியில் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட லீலாவதி.

Updated On :19 டிசம்பர் 2024, 10:32 pm

Din

தேனியில் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரம் அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த சின்னச்சாமி மனைவி லீலாவதி (38). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். லீலாவதியின் மகள் கெளசல்யவுக்கும் (20), திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிபுரம் அருகேயுள்ள கொழுஞ்சிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் பிச்சைமுத்துவுக்கு (27) கடந்த மாா்ச் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக, கெளசல்யா கணவரைப் பிரிந்து தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா். இந்தத் தகராறு காரணமாக, தேனியில் உள்ள மாமியாா் வீட்டுக்கு பிச்சைமுத்து வியாழக்கிழமை சென்றாா். அங்கு தனியாக இருந்த லீலாவதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனா்.