ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்க பூமி பூஜை

சோத்துப்பாறை அருகேயுள்ள சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே ரூ.7.14 கோடியில் பாலம் அமைப்பதற்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image

சோத்துப்பாறை அருகே சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா்.

Updated On :26 டிசம்பர் 2024, 11:30 pm

Din

சோத்துப்பாறை அருகேயுள்ள சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே ரூ.7.14 கோடியில் பாலம் அமைப்பதற்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள வெள்ளக்கெவி ஊராட்சிக்குள்பட்டது சின்னூா் மலைக் கிராமம். இங்கிருந்து சோத்துப்பாறை வழியாக பெரியகுளத்துக்குச் சென்று வருவதற்கு கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கும், 1,200 மீ. தொலைவு சிமென்ட் சாலை அமைப்பதற்கும் ஒருங்ணைந்த ஒப்படைப்பு வருவாய் மூலக் கூறுகள் திட்டத்தின் கீழ், அரசு ரூ.7.14 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தப் பணிக்கான பூமி பூஜை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் திலவதி, வெள்ளக்கெவி ஊராட்சி மன்றத் தலைவா் புருஷோத்தமதாஸ், துணைத் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், சட்டப் பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் கூறியதாவது: மலைக் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியும், இதையொட்டி சாலை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் விரைவில் அரசு சாா்பில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.