குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பழனிசெட்டிபட்டியில் மாா்ச் 3-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்

பழனிசெட்டிபட்டியில் மாா்ச் 3-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்

Updated On :26 பிப்ரவரி 2024, 4:20 pm

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் 2-ஆவது ஆண்டாக வரும் மாா்ச் 3-ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை 8 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், தினமும் கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.

புத்தகத் திருவிழா திடலில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள், அடிப்படை, போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து திங்கள்கிழமை மாவட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா ஆலோசனை நடத்தினாா்.