பூலாநந்தபுரம் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், பூலாநந்தபுரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஆய்வுப் பணி மேற்கொண்டாா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், பூலாநந்தபுரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஆய்வுப் பணி மேற்கொண்டாா்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைஞா் கனவு திட்டத்துக்கு திரளானோா் மனுக்கள் கொடுத்தனா்.

இந்த நிலையில், பூலாநந்தபுரம் ஊராட்சியில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து நேரடியாக விசாரிக்க விண்ணப்பதாரரின் வீட்டுக்கே மாவட்ட ஆட்சியா் சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, ஊராட்சி மன்றத் தலைவா், செயலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com