கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கம்பம் நகராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.


உத்தமபாளையம்: கம்பம் நகராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகின. இதற்கிடையே, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தில், கம்பம் நகராட்சியில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கடை உரிமையாளா்களிடம் ஏற்கெனவே தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, கம்பம் வடக்கு காவல் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இதில் சில கடை உரிமையாளா்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு தகரச் செட்டுகளை அகற்றினா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜன் கூறியதாவது:
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும். சாலையின் நடுவே தடுப்பு அமைத்து இரு வழிச் சாலையாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம் உள்ளது என்றாா் அவா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...