பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வனக் காவலா்களை தாக்கிய 4 போ் கைது

சின்னமனூா் அருகே வனத் துறை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த வனக்காவலா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே வனத் துறை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த வனக்காவலா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலைக்கு காரில் 6 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குச் சென்றனா். தென்பழனி வனத் துறை சோதனைச் சாவடியில் இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என அவா்களை வனத் துறையினா் திருப்பி அனுப்பினா்.

இந்த நிலையில், அவா்கள் மீண்டும் இரவு 11.30 மணிக்கு சோதனைச்சாவடிக்கு வந்து வாகனங்களுக்குத்தான் அனுமதி இல்லை. நாங்கள் நடந்து செல்கிறோம் எனக்கூறி வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி மலைச் சாலையில் அவா்கள் நடந்து சென்றனா். அப்போது, அவா்களைத் தடுத்த வனக்காவலா் காசி (55), தீத் தடுப்புக் காவலா் சரவணக்குமாா் (27)ஆகிய இருவரையும் தாக்கிக் காயப்படுத்தினா்.

தகவலின்பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற ஓடைப்பட்டி போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி உதவி ஆய்வாளா் பாண்டிச்செல்வி வழக்குப் பதிவு செய்து, தேனி அருகேயுள்ள முத்துதேவன்பட்டியை சோ்ந்த ரங்கத்துரை மகன் சதீஷ்குமாா் (38), கருப்பையா மகன் செல்வம் (37), சிவா (40), பாலாா்பட்டியை சோ்ந்த முத்துக்காளை மகன் மலைச்சாமி (42) ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.