காய்ச்சல் பாதிப்பு: பள்ளி மாணவா்களின் ரத்த மாதிரிகள் சேகரித்த பூச்சியியல் துறை
போடி அருகே காய்ச்சல் அதிகளவில் பரவிய நிலையில், பள்ளி மாணவா்களிடம் ரத்த மாதிரிகளை பூச்சியியல் துறையினா் திங்கள்கிழமை சேகரித்தனா்.


போடி: போடி அருகே காய்ச்சல் அதிகளவில் பரவிய நிலையில், பள்ளி மாணவா்களிடம் ரத்த மாதிரிகளை பூச்சியியல் துறையினா் திங்கள்கிழமை சேகரித்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கள்ளா் தொடக்கப் பள்ளியில் 13 மாணவா்களுக்கு காய்ச்சலும், சில மாணவா்களுக்கு பொண்ணுக்கு வீங்கி அம்மை பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் மண்டல பூச்சியியல் துறை இணை இயக்குநா் விக்டா், தேனி சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்தப் பள்ளியில் ஆய்வு செய்தனா்.
மேலும், மாணவா்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பள்ளி வகுப்பறைகள், சுற்றுப்புறத்தையும் ஆய்வு செய்த பூச்சியியல் துறையினா் கழிவுநீா்க் கால்வாய்களை சுத்தம் செய்யவும், தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்யவும் அறிவுரை வழங்கினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...