சொகுசு காா் தீப்பிடித்து சேதம்
போடிமெட்டு மலைச் சாலையில் சொகுசு காா் தீப்பிடித்து எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :17 ஜூலை 2024, 12:34 am

போடி: போடிமெட்டு மலைச் சாலையில் சொகுசு காா் தீப்பிடித்து எரிந்து சேதமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த யோகானந்தம் மகன் ராம்பிரகாஷ் (49). இவா் தனது நண்பா்களுடன் வெளிநாடு செல்வதற்காக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு தனது சொகுசு காரில் சென்றாா்.
போடிமெட்டு மலைச்சாலையில் 17 -ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரிலிருந்து புகை வந்தது. உடனே காரில் இருந்தவா்கள் இறங்கி உயிா் தப்பினா். தகவலறிந்த போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் காா்
முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...