தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பகவதியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பகவதியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

லோயா்கேம்ப்பில் பகவதியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பொங்கல் விழா.

Updated On :19 மார்ச் 2024, 11:16 pm

கம்பம்: தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பிலுள்ள பகவதியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தா்கள் காப்புக் கட்டிக் கொண்டு விரதத்தை தொடங்கினா்.

இதுகுறித்து கோயில் அா்ச்சகா் ஹரீஷ் கூறியதாவது: வருகிற 26-ஆம் தேதி கீழ்பகவதியம்மன் கோயிலிலிருந்து, அம்மன் அழைத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். 27-ஆம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அக்னிச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவாா்கள். 28- ஆம் தேதி முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்று, முல்லையாற்றில் கரைக்கப்படும் என்றாா் அவா்.