ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

News image

சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :8 மே 2024, 12:31 am

Din

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கோடை வெப்பத்தை தணிக்க ஆற்றில் குளித்து மகிழ்ந்தனா்.

தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மேகமலை, சுருளி அருவி, கும்பங்கரை அருவி, வைகை அணை என முக்கிய இடங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோடை மழை இல்லாத நிலையில் நீா் நிலைகளில் நீா் வரத்தின்றி சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதையடுத்து உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, வீரபாண்டி பகுதி வழியாக காரில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் முல்லைப் பெரியாற்றில் குளித்து கோடை வெப்பத்தை தனித்து வருகின்றனா். சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டை தடுப்பணையில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை குளித்து மகிழ்ந்தனா்.