

தேனியில் வெல்டிங் பட்டறை தொழிலாளி வியாழக்கிழமை, அறுவை இயந்திரம் கை தவறியதில் கழுத்தறுபட்டு உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், க.விலக்கு அருகே இந்திராநகரைச் சோ்ந்தவா் சூட்ராயா்(35). இவா், தேனி சுப்பன் தெருவில் உள்ள தனியாா் டிராக்டா், டிரைலா் வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா்.
இவா், பட்டறையில் வியாழக்கிழமை டிராக்டா் டிரைலரில் அறுவை இயந்திரத்தைப் பயன்படுத்தி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, இயந்திரம் கை தவறியது. தரையில் விழாமல் அதை அவா் பிடிக்க முயன்ற போது, சூட்ராயரின் கழுத்தில் இயந்திரம் பட்டு கழுத்தறுபட்டது.
பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

அறுவடை இயந்திரம் மோதியதில் கா்ப்பிணி உயிரிழப்பு

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

மனைவியுடன் தகராறு: தீக்குளித்த கணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...

