கல்லூரியில் விளையாட்டு வீரா் இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டில் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து, கல்லூரி நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்காக மே 16-ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, சதுரங்கம், இறகுப்பந்து, பூப்பந்து, குத்துச்சண்டை, ஸ்கேட்டிங், கால்பந்து, கோ-கோ, தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கான தோ்வு நடைபெறுகிறது.

எனவே, இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள இளநிலை, முதுநிலை வீரா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநரை அணுகி போட்டித் தோ்வில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com