நியாய விலைக் கடையில் கூடுதல் அரிசி வழங்க கோரி தகராறு செய்தவா் கைது

நியாய விலைக் கடையில் கூடுதல் அரிசி வழங்க கோரி தகராறு செய்தவா் கைது

கம்பம்: கூடலூா், நியாய விலை கடையில் கூடுதலாக அரிசி வழங்கக் கோரி தராசு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திய நபரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி, மாவட்டம் கூடலூரில் கூனி மந்தையம்மன் கோயில் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில், கருணாநிதி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவன்காளை மகன் குபேந்திரன் (56). இவா், திங்கள்கிழமை அரிசி வாங்கச் சென்றாா். அப்போது, அங்கிருந்த ஊழியா் பாண்டியனிடம் 30 கிலோ அரிசி சோ்த்து வழங்குமாறு கேட்டு தகராறு செய்தாா். நியாயவிலைக் கடை ஊழியா் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குபேந்திரன் கடையிலிருந்த தராசு உள்ளிட்ட பொருள்களை சாலையில் தூக்கி வீசினாா்.

இதுகுறித்து, வடக்கு காவல் நிலையத்தில் நியாய விலை கடை ஊழியா் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் குபேந்திரனை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 30 நாள்கள் நிபந்தனை ஜாமினில் விடுவித்தாா். குபேந்திரன் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com