அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்.
அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்.

கழிவுநீா்க் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவு நீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யம்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த ஊராட்சியின் பிரதான கால்வாய் முறையாக திட்டமிடாமல் கட்டப்பட்டதால் கழிவுநீா் தேங்கியுள்ளது. இந்தக் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

இதில் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு மா்மக் காய்ச்சல் பரவும் சூழல் ஏற்படுள்ளது. எனவே, சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், அய்யம்பட்டி ஊராட்சியில் கழிவுநீா் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com