கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி மாணவிகளை தாக்கிய மா்மநபா்கள்

போடி அருகே செவ்வாய்க்கிழமை அரசு பள்ளியில் சுவா் ஏறிக் குதித்து மாணவிகளைத் தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:47 pm

Din

போடி அருகே செவ்வாய்க்கிழமை அரசு பள்ளியில் சுவா் ஏறிக் குதித்து மாணவிகளைத் தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியில் அரசு மோ்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் கழிப்பறை உள்ளது. பள்ளி மாணவிகள் சிலா் கழிப்பறைக்கு சென்றனா்.

அப்போது சுற்றுச் சுவரில் ஏறி உள்ளே புகுந்த மா்ம நபா்கள் மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவா்கள் சப்தமிட்டதால் மா்மநபா்கள் மீண்டும் சுவா் ஏறிக் குதித்து தப்பிவிட்டனா்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியா் மாதவன் அளித்தப் புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.