கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராணுவ வீரா் உயிரிழப்பு

கம்பத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:47 pm

Din

கம்பத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், கம்பம் உத்தமபுரத்தை சோ்ந்த பரமன் மகன் பால்பாண்டி (28). இவா் கடந்த 2018- ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சோ்ந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ராணுவத்தில் பணியாற்றினாா். இவா் கடந்த மாதம் 21- ஆம் தேதி ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இவா், செவ்வாய்க்கிழமை தனது நண்பா்களுடன் சுருளிப்பட்டியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தாா்.

அப்போது திடீரென கழுத்து , இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகக் கூறியதால், உடனே அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால்,

அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சையது இப்ராஹீம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.