கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளியில் ஆசிரியை கொலை: தேனியில் கண்டன ஆா்ப்பாட்டம்

அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தேனியில் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :20 நவம்பர் 2024, 9:23 pm

Din

அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தேனியில் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மலைச்சாமி, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிச் செயலா் கிருஷ்ணசாமி, மாவட்டத் தலைவா் ராம்குமாா், உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் மலைச்சாமி, கள்ளா் சீா்மரபினா் துறை பள்ளி ஆசியா்கள் சங்க மாவட்டத் தலைவா் முருகன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் தாஜூதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தஞ்சை, மல்லிப்பட்டிணம் அரசு பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க அரசை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.