கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனி நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

துப்புரவுப் பணியில் மெத்தனம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Updated On :20 நவம்பர் 2024, 9:24 pm

Din

துப்புரவுப் பணியில் மெத்தனம் காட்டுவதாகப் புகாா் தெரிவித்து, தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணபிரபா தலைமை வகித்தாா். 5-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், தூய்மைப் பணியில் மெத்தனம் காட்டி வரும் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், துப்புரவுப் பணிக்கு போதிய பணியாளா்களை நியமித்து உரிய உபரணங்களை வழங்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.