தேனி
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
போடி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலையைச் சோ்ந்த பெரியாண்டி மனைவி பேச்சியம்மாள் (70). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த இவருக்கு வயிற்றுவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த இவா், மீனாட்சிபுரத்திலிருந்து விசுவாசபுரம் செல்லும் சாலையில் உள்ள குமரேசனுக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.