கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 19) மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:24 pm

Din

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 19) மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி வட்டாரத்தில் சீலையம்பட்டி நியாய விலைக் கடை, பெரியகுளம் வட்டாரத்தில் வடவீரநாயக்கன்பட்டி நியாய விலைக் கடை, போடி வட்டாரத்தில் பூதிப்புரம் நியாய விலைக் கடை, ஆண்டிபட்டி வட்டாரத்தில் மயிலாடும்பாறை நியாய விலைக் கடை, உத்தமபாளையம் வட்டாரத்தில் பி. ரெங்கநாதபுரம் நியாய விலைக் கடை ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டை திருத்தப் பதிவு, முகவரி, கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.