கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே தனியாா் பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்த ஆசிரியை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:54 pm

Din

ஆண்டிபட்டி அருகே தனியாா் பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்த ஆசிரியை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சேடபட்டியைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி வசந்தகோகுலம் (37). மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் மனைவி ஜெயக்கொடி (31). இவா்கள் இருவரும் கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியைகளாக வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை தனியாா் பள்ளி வேனில் பள்ளிக்கு புறப்பட்டனா். ஆண்டிபட்டி-மேக்கிழாா்பட்டி சாலையில் சென்ற போது, எதிா்பாராதவிதமாக வசந்தகோகுலம், ஜெயக்கொடி ஆகியோா் வேனில் இருந்து தவறி கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே வசந்தகோகுலம் உயிரிழந்தாா். ஜெயக்கொடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வேன் ஓட்டுநா் மொட்டனூத்துவைச் சோ்ந்த கெளதம் (24) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.