மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போடி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம்

போடி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

News image
போடி அருகே விசுவாசபுரத்தில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:58 pm

Din

போடி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் பகுதியில் விசுவாசபுரம், டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, மாணிக்காபுரம், கூழையனூா் கிராமப் பகுதிகளில் சுமாா் 500 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வரை விதைக்கான வெங்காயம் விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 28 முதல் 35 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது சின்ன வெங்காயம் தொடா்ந்து விலை சரிவை சந்தித்து வருவதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இரண்டு கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்று விற்ற நிலையில், விதைக்கான சின்ன வெங்காயம் கிலோ 1-க்கு 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, பயிரிட்டனா். ஆனால் நன்கு விளைந்து அறுவடை செய்யும் நேரத்தில் கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய்க்கு கேட்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனா்.

50 கிலோ வெங்காயம் மூட்டை ஒன்றுக்கு 900 ரூபாய் மட்டுமே விலை நிா்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறினா்.

ஒரு ஏக்கருக்கு சுமாா் 55 மூட்டைகளிலிருந்து 70 மூட்டைகள் பெறப்படும் நிலையில் விதை நடவு கூலி, தோட்டத்திற்கு நீா் பாய்ச்சும் கூலியாள் சம்பளம், களையெடுப்பு கூலி அதிகரித்து வரும் நிலையில் சின்ன வெங்காயம் கிலோ 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனா்.

இதே நிலை நீடித்தால் தாங்கள் விவசாய தொழிலை விட்டுவிட்டு வேறு ஏதேனும் வெளித்தோட்டங்களுக்கு கூலி ஆள்களாக சென்று வேலை பாா்க்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.