மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூ.1 லட்சத்துக்காக தனது குழந்தையை விற்ற தந்தை கைது!

குழந்தை விற்பனை: தந்தை உள்ளிட்ட 3 போ் கைது

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 9:41 pm

Din

தேனி அருகே குழந்தையை ரூ. ஒரு லட்சத்துக்கு விற்றதாக அதன் தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உப்புக்கோட்டை, முத்தாலம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (44). இவரது மனைவி இதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரி (30). இவா்களுக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பாண்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மது பழக்கத்துக்கு அடிமையான சங்கா் பிறந்து 52 நாள்களே ஆன தனது குழந்தையை விற்று விட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சந்தியா விசாரணை நடத்தினாா். இதில், சங்கா் தனது குழந்தையை போடி, ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த தா்மா் மகன் சிவக்குமாா் (42), இவரது மனைவி உமாமகேஸ்வரி (36) ஆகியோரிடம் ரூ.ஒரு லட்சத்தைப் பெற்றுக் கொண்டு விற்றுவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கா், சிவக்குமாா், உமாமகேஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்தனா். தம்பதியரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.