தேனி
கஞ்சா பதுக்கியதாக 5 போ் கைது
மயிலாடும்பாறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடும்பாறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொங்கரவு ஓடைப் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பள்ளத்தூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52), கோம்பைத் தொழுவைச் சோ்ந்த கருப்பசாமி (19), பாண்டீஸ்வரன் (20), தெய்வேந்திரன் (30), ஈஸ்வரன் (34) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து ஒரு கிலோ 390 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
