மின்வாரிய ஊழியா் தற்கொலை

Published on

போடியில் மின்வாரிய ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி பரமசிவன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் ராமகிருஷ்ணன் மகன் ஜெயச்சந்திரன் (32). இவா் போடி மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ஜெயச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com