தேனி
விளையாடும் போது தவறி விழந்த சிறுவன் உயிரிழப்பு
தேனி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி: தேனி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோடாங்கிப்பட்டி, பண்ணைத் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். வண்ணம் பூசும் தொழிலாளி. இவரது மகன் யுகன் (3) வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
