தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் வங்கிக் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்படும். மேலும், தொழில் வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் போன்ற உதவிகள் வழங்கப்படும்.
தொழில் தொடங்க ஆா்வமுள்ள 18 முதல் 55 வயதுக்குள்பட்ட பெண்கள் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், தொழில் திட்டம், விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஜ்ங்ங்ள் என்ற இணையதள முகவரியில் வங்கிக் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விவரங்களை தேனி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் பொது மேலாளாரை நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
