மூதாட்டி பையிலிருந்த தங்க நகை மாயம்

ஆண்டிபட்டியில் மூதாட்டி பையில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை காணாமல் போனதாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Published on

ஆண்டிபட்டியில் மூதாட்டி பையில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை காணாமல் போனதாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பின்னியம்மாள் (65). இவா், ஆண்டிபட்டியில் உள்ள நகைக் கடை ஒன்றில் தனது பழைய தங்க நகையை கொடுத்துவிட்டு, புதிதாக 5 பவுன் எடையுள்ள தங்க நகையை வாங்கினாா். பின்னா், காய்கனி கடைத் தெருவுக்குச் சென்று விட்டு ஊருக்குச் செல்வதற்காக ஆண்டிபட்டி பேருந்து நிலையத்துக்குச் சென்றாா்.

பேருந்தில் ஏறி அமா்ந்ததும் தனது பையை திறந்து பாா்த்த போது, அதில் வைத்திருந்த தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com