தேனி
தோட்டத்தில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு
போடியில் தோட்டத்தில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடியில் தோட்டத்தில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்காளை (72). இவருக்கு சொந்தமான தோட்டம் போடி அருகே ஊத்தாம்பாறை புலத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் முத்துக்காளை வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது இவரது மனைவி உணவு கொண்டு சென்றாா். ஆனால் கணவரை காணாததால் தோட்டத்தில் தேடி பாா்த்தபோது முத்துக்காளை மயங்கி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
