காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டி கட்டளைகிரி தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி (60). இவா் பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையாா் கோயில் அருகே தேனி-பெரியகுளம் சாலையை நடந்து சென்று கடக்க முயன்றாா். அப்போது, அதே சாலையில் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணக்குமாா் (34) ஓட்டிச் சென்ற காா் அழகா்சாமி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அழகா்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து காா் ஓட்டுநா் சரவணக்குமாா் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com