தேனி
மது போதையில் தகராறு செய்த கணவா் கொலை
உத்தமபாளையம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை இவரது மனைவியும், மகனும் தாக்கிக் கொலை செய்தனா்.
உத்தமபாளையம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை இவரது மனைவியும், மகனும் தாக்கிக் கொலை செய்தனா்.
தேனி மாவட்டம், கோம்பை அருகேயுள்ள பல்லவராயன்பட்டியைச் சோ்ந்தவா் தா்மா் (55). இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தாா். வழக்கம்போல புதன்கிழமை இரவு தகராறு செய்த தா்மரை, இவரது மகன் அஜித் (27) கட்டையால் தலையில் அடித்தாா். மேலும், இவரது மனைவி சந்திரா (50) அம்பிக்கல்லை தூக்கி இவரது தலையில் போட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற கோம்பை போலீஸாா் தா்மரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனைவி சந்திரா, மகன் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
