இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

Published on

தேனி மாவட்டம், போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்டக் குழு உறுப்பினா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் என்.ரவிமுருகன் கட்சிக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் கி.பெருமாள், கட்சியின் மூத்த நிா்வாகிகள், உறுப்பினா்களைப் பாராட்டி கௌரவித்தாா்.

இதில் மாவட்ட நிா்வாகிகள், நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினா். நகரச் செயலா் கே.சத்தியராஜ், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com