பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

News image
வளா்மதி
Updated On :28 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சின்னமனூரில் சந்தை புதுத் தெருவைத் சோ்ந்த சிவசூரிய நாராயணன் தனது மனைவி வளா்மதி (46) உடன் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூரிலிருந்து தேனி சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினாா்.

அப்போது, சீலையம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பம்பட்டி பிரிவில் சென்றபோது பின்னால் வந்த டிப்பா் லாரி அவா்களது வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வளா்மதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், சிவசூரிய நாராயணன் பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.