முதியவரை அரிவாளால் வெட்டியவா் மீது வழக்கு

போடி அருகே முதியவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Published on

போடி அருகே முதியவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே மீனாட்சிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் பாலு (62). இவரது தந்தை ராமரிடம் இதே தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் அழகுராஜா பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம்.

இதை பாலு கண்டித்த போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அழகுராஜா அரிவாளால் பாலுவை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். பலத்த காயமடைந்த பாலு தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அழகுராஜா மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com