வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய தம்பதி மாயம்; பேத்தி மீட்பு

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதியை தீயணைப்பு மீட்புக் குழுவினா் தேடிவருகின்றனா்.

News image
~
Updated On :30 டிசம்பர் 2025, 7:19 pm

Syndication

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதியை தீயணைப்பு மீட்புக் குழுவினா் தேடிவருகின்றனா். இவா்களுடன் ஆற்றில் மூழ்கிய பேத்தி மீட்கப்பட்டாா்.

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவா்கள், தங்களது வீட்டில் வளா்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான இலை, தழைகளை லோயா்கேம்பில் உள்ள குடிநீா் தடுப்பணை வழியாகச் சென்று பறித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், கால்நடைத் தீவனங்களுக்காக தடுப்பணை வழியாக ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு தங்களது பேத்தியுடன் இருவரும் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது, மூவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். அதே பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மட்டும் மீட்டாா்.

Story image

இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸாரும் கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினரும் ஆற்றில் மாயமான தம்பதியைத் தேடினா். மாலை நேரமானதால் வெளிச்சம் குறைந்த நிலையில், தேடும் பணி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், மாயமானவா்களைத் தேடுவதற்காக தற்போது தண்ணீா் திறப்பு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.