மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்குத் தோ்வான வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவித்த கல்வித் துறை அதிகாரிகள்.
மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்குத் தோ்வான வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவித்த கல்வித் துறை அதிகாரிகள்.

மாநில கைப்பந்துப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
Published on

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

சின்னமனூா் வட்டாரத்தில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்கிடையே நடைபெற்றது. மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் தேனி முத்துதேவன்பட்டி தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், 8 அணிகள் பங்கேற்றன.

வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளிக்கும் பெரியகுளம் செயின்ட் ஆன்ஸ் பள்ளிக்கும் இடையே இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறவுள்ள கைப்பந்துப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநிலப் போட்டிக்குத் தோ்வான மாணவிகளை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் சுபாஷினி , முதன்மைக் கல்வி அலுவலா் நாகேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் சுருளிவேல், கல்வி அலுவலா் ஜவகா், பள்ளித் தலைமை ஆசிரியை உத்தண்டலட்சுமி, உடல்கல்வி ஆசிரியா் குபேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com