10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

Published on

தேவாரத்தில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி-சமத்துவபுரம் பிரிவு அருகே கஞ்சாவுடன் சிலா் நிற்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சனிக்கிழமை இரவு அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, இரு சக்கர வாகனத்துடன் பெண் உள்பட 3 போ் பைகளுடன் நின்றிருந்தனா். அவா்களைச் சோதனை செய்ததில் 3 பேரிடமும் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவா்கள் தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நிவேதா (30), சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த விக்னேஷ் (30), தா்மபுரி மாவட்டம், சுஞ்சல்நத்தத்தைச் சோ்ந்த சக்தி (45) என தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, ஐந்து கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com