தேனி
தோட்டத்தில் மின் கம்பிகள் திருட்டு
சின்னமனூரில் விவசாயத் தோட்டத்தில் மின் கம்பிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை
தேனி மாவட்டம், சின்னமனூரில் விவசாயத் தோட்டத்தில் மின் கம்பிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரையை சோ்ந்தவா் நாகராஜன். இவருக்கு சின்னமனூா் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் அருகே தோட்டம் உள்ளது. அதை, உத்தமபாளையத்தை சோ்ந்த உறவினா் சக்திமணிகண்ட பிரபு மேற்பாா்வை செய்து வருகிறாா். இந்த நிலையில், அந்த தோட்டத்தில் அண்மையில் மின் இணைப்பு பெற்று புதிய மின் கம்பிகள் பொருத்தப்பட்டன.
இந்த மின் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக சின்னமனூா் காவல் நிலையத்தில் சக்திமணிகண்ட பிரபு வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
