விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Published on

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேவதானபட்டி பாய்ஸ் நகா் அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் விபத்துக்குள்ளானது. அப்போது, கொடைக்கானலிருந்து சென்னைக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும், மற்றொரு காரும், இந்த காா் மீது மோதியது.

இதனால் வத்தலகுண்டு-தேனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவலா்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெரியகுளத்திலிருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் இந்த விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது. இதில், பெரியகுளம் வடகரைச் சோ்ந்த சசிக்குமாா் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com