இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், சனிக்கிழமை இரவு முதல் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

மேலும், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.