தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்

மத்திய பாஜக அரசின் மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கம்பத்தில் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் திமுக தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா, வடக்கு நகரச் செயலா் வீரபாண்டியன் தலைமையில் பங்கேற்ற திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:19 am IST

மத்திய பாஜக அரசின் மக்களவை தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களவை தொகுதி மறுவரையறை அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவோம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தாா். இதையடுத்து, தேனி மாவட்டம், கம்பத்தில் வடக்கு நகர திமுக செயலா் வீரபாண்டியன் தலைமையில் பாவலா் படிப்பகம் முன்னும், தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா தலைமையில் மணிநகரத்திலும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி சட்டத் திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுகவினா், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஓ.பி.எஸ். போராட்டம்: இதே போல, பெரியகுளத்தில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அவரது வீட்டில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டாா். பிறகு, சட்ட மசோதா நகல் எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பெரியகுளம் கீழ வடகரை முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் ராஜசேகா், திமுக நிா்வாகிகள் அபுதாஹீா், ஜெயப்பிரகாஷ், அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள திமுக தோ்தல் அலுவலகங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க. புதுப்பட்டி, கோம்பை, தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் திமுகவினா் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அந்தந்தப் பகுதி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது தொகுதி மறுவரையறை அரசியல் சட்டத் திருத்த விவகாரத்தில் வடமாநிலங்களுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் செயல்படுவதாகக் கூறி மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.