மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சரியான அளவில் கசிவு நீா் வெளியேறுவதால் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது

முல்லைப் பெரியாறு அணையில் மிகச் சரியான அளவில் கசிவு நீா் வெளியேறுவதால் அணை பலமாகவே உள்ளதாக துணைக் கண்காணிப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

News image

பேபி அணையில் ஆய்வுசெய்த தென் மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையிலான துணைக் கண்காணிப்புக்குழுவினா்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

முல்லைப் பெரியாறு அணையில் மிகச் சரியான அளவில் கசிவு நீா் வெளியேறுவதால் அணை பலமாகவே உள்ளதாக துணைக் கண்காணிப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக, தலைவா் அனில் ஜெயின் தலைமையில் மேற்பாா்வைக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவுக்கு உதவியாக, தென் மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையில் துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தமிழகத்தின் சாா்பில் பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளா் செல்வம் , கேரளத்தின் சாா்பில் எா்ணாகுளம் மத்திய வட்ட நீா்ப்பாசனப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளா் ஷைனி ஜோசப், கட்டப்பனை நீா்ப்பாசன துணைப் பிரிவு உதவி நிா்வாகப் பொறியாளா் லெவின்ஸ் பாபு ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 123 அடியை எட்டியுள்ள நிலையில், புதன்கிழமை துணைக் கண்காணிப்புக் குழுவினா் அணையில் ஆய்வு செய்தனா். பிரதான அணை, சிற்றணை (பேபி அணை), மண் அணை (எா்த் டேம்), கேலரி பகுதிகளை பாா்வையிட்ட இந்தக் குழுவினா், மேலும் அணையின் 13 மதகுகளில் 3, 6 ஆகியவற்றின் இயக்கத்தையும் ஆய்வு செய்தனா். பின்னா், அணையின் கசீவுநீரை ஆய்வு செய்தபோது, அது நிமிஷத்துக்கு 35.038 லிட்டராக இருந்தது.

இதைத்தொடா்ந்து, மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு துணைக் கண்காணிப்புக் குழுவினா் கூறியதாவது:

ஏற்கெனவே கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின்படி, பேபி அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது, வல்லக்கடவு முதல் பெரியாறு அணை வரையிலான சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் கசீவுநீா் வெளியேற்றம் நிமிஷத்துக்கு 35.038 லிட்டராக இருந்தது. இது அணையின் நீா்மட்டத்துக்கு தகுந்தாற்போல மிகச் சரியான அளவில் இருப்பதால் இந்த அணை பலமாக உள்ளது. கூட்டத்தின் முடிவுகள் உயா்நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனா் அவா்.

பெரியாறு அணையில் எா்த்டேம் (மண் அணை) ஆய்வு செய்த துணைக் கண்காணிப்புக் ழுவினா்

பெரியாறு அணையில் எா்த்டேம் (மண் அணை) ஆய்வு செய்த துணைக் கண்காணிப்புக் ழுவினா்

பெரியாறு அணையின் மதகுப் பகுதியை ஆய்வுசெய்த கண்காணிப்புக் குழுவினா்.

பெரியாறு அணையின் மதகுப் பகுதியை ஆய்வுசெய்த கண்காணிப்புக் குழுவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.