கம்பம், கூடலூா், சின்னமனூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
தேனி மாவட்டம், கம்பம், கூடலூா், சின்னமனூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உத்தமபாளையம் வட்டாரத்தில் சுமாா் 1.75 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு சா்க்கரை, பச்சரிசி மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. கம்பத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழக்கப்பட்டது. சின்னமனூரில் நகா் மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு தலைமையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் சின்னமனூா் வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூடலூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி பத்மாவதிலோகன்துரை தலைமையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதே போல, உத்தமபாளையம் வட்டாரத்தில் அனைத்து நியாவிலைக் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.
இணையதளக் கோளாறு: சின்னமனூரில் பரிசுத் தொகுப்பு வழங்கத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே இணைதளத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பொருள்கள் வழங்குவது தடைபட்டது. 2 நேரத்துக்குப் பிறகு கோளாறு சீரானதைத் தொடா்ந்து மீண்டும் விநியோகம் நடைபெற்றது.

