கோவில்பட்டி, கயத்தாறில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கோவில்பட்டி, கயத்தாறில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Published on

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட 1.07 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி வட்டத்தில் 95 நியாயவிலைக் கடைகளில் 75 ஆயிரத்து 304 குடும்ப அட்டைதாரா்களுக்கும், கயத்தாறு வட்டத்தில் 84 நியாயவிலைக் கடைகளில் 32 ஆயிரத்து 221 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வியாழக்கிழமை முதல் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம், இலவச வேஷ்டி, சேலை வழங்கும் பணி தொடங்கியது.

இதையொட்டி, கோவில்பட்டியில் அரசு அலுவலா் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில் தொடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் வழங்கும் பணியை சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள் தலைமையில் நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் சரவண பெருமாள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கயத்தாறு வட்டத்திற்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பணிகளை வட்டாட்சியா் அப்பனராஜ், வட்ட வழங்க அலுவலா் வனஜா ஆகியோா் கண்காணித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com