சின்னமனூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கி சிறிது நேரத்திலேயே நிறுத்தம்!

சின்னமனூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கி சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.
நியாயவிலைக் கடைகளில்
நியாயவிலைக் கடைகளில்
Updated on
1 min read

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்த சிறிது நேரத்திலேயே பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை விற்பனை சங்கம் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை பச்சரிசி 5 அடி நீள முழு கரும்பு இவற்றுடன் ரூபாய் 3000 ரொக்க பணம் வழங்கும் நிகழ்ச்சி காலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி சின்னமனூரில் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் தொடங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது.

ஆனால் சிறிது நேரத்திலேயே இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆர்வத்துடன் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்கள், அந்தந்த ரேஷன் கடைகளிலே முகாமிட்டு அமர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்தவுடன் பொருள்கள் விநியோகம் தொடங்கும் என பொதுமக்களிடம் கூறி சமாதானம் செய்து வருகின்றனர்.

இது குறித்து சின்னமனூரில் நியாய விலைக் கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், இந்த கோளாறு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது, விரைவில் சரி செய்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com