சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே சாலை தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தேனி: தேனி அருகே சாலை தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி, திருவள்ளுவா் குடியிருப்பு, விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சுருளிவேலு மகன் வேல்முருகன் (21). இவா், தனது நண்பா் தேனி, பொம்மையகவுண்டன்பட்டி, பள்ளி ஓடைத் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாருடன் (22) ஆண்டிபட்டியிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இதில் இரு சக்கர வாகனத்தை வேல்முருகன் ஓட்டிச் சென்றாா். அப்போது, அரப்படித்தேவன்பட்டி பகுதியில் சாலை தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியல், பலத்த காயமடைந்த வேல்முருன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். காயமடைந்த சுரேஷ்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com