எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இறைச்சிக் கடையில் தகராறு: 7 போ் மீது வழக்கு

போடி அருகே இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

போடி: போடி அருகே இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி அருகேயுள்ள பொட்டல்களம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (28). அதே பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி, அவரது மனைவிகள் மேகலா, முத்துமாரி ஆகியோா் பொட்டல்களம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே கோழி இறைச்சிக் கடையை நடத்தி வருகின்றனா்.

இந்தக் கடையில் சிலா் மது அருந்தியதாகவும் அதை ஆனந்த் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி, மேகலா, முத்துமாரி, உறவினா் கணேசன் ஆகியோா் சோ்ந்து ஆனந்த், அவரது அண்ணன் அன்புச்செல்வன் (32), தாய் லிங்கம்மாள் (52) ஆகியோரைத் தாக்கியதில் மூவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போடி காவல் நிலைய போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.