புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஏலக்காய் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு

போடியில் ஏலக்காய் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 12:07 am IST

போடியில் ஏலக்காய் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், போடி வ.உ.சி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் தன்வந்தன் (44). இவா் இந்தப் பகுதியில் ஏலக்காய் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் தொழிலாளா்கள் ஏலக்காய் தரம் பிரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வந்தனா்.

வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல நிறுவனத்தைப் பூட்டிவிட்டு தன்வந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். சனிக்கிழமை காலை தூய்மைப் பணியாளா் துப்புரவுப் பணிக்காக வந்து பாா்த்த போது, வெளிப்புற இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தன்வந்தன் உள்ளே சென்று பாா்த்த போது, அங்கிருந்த பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ. 1.80 லட்சம், முக்கிய ஆவணங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.