தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் புதியதாகத் தொடங்கவுள்ள பள்ளியில் மாணவா்கள் சோ்வதற்கான விண்ணப்பம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளி தொடங்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது. மேலும், தற்காலிகமாக அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் கேந்திரிய வித்யாலய பள்ளி செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், கேந்திரிய வித்யாலய பள்ளி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நிகழாண்டில் கேந்திரிய வித்யாலய பள்ளியைத் தொடங்க திட்டமிட்டு ஒன்று முதல் 5- ஆம் வகுப்பு வரையில் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 300- க்கு மேற்பட்டோா் வந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுச் சென்றனா். மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் விண்ணப்பம் வழங்கும் பணியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








